நெட்பிளிக்ஸ்ல என்ன படம் பாக்கலாம்… கட்சி மரண அடி வாங்கும்போது காங்கிரஸ் பிரமுகர் டிவீட்!

வெள்ளி, 11 மார்ச் 2022 (09:11 IST)
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்காமல் தோல்வியை சந்தித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவில்லை. பஞ்சாபில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மற்ற நான்கு மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இது காங்கிரஸுக்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது. தோல்வியை அடுத்து பேசியுள்ள ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரம் நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கும்போதே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘நெட்பிளிக்ஸில் என்ன பார்க்கலாம் எனப் பரிந்துரை செய்யுங்கள்’ எனக் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்