நாட்டில் ஒட்டுமொத்தமாக பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை எத்தனை?
வெள்ளி, 11 மார்ச் 2022 (10:24 IST)
கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்ற விவரம் பின்வருமாறு...
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று 5 மாநிலங்களுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இந்நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்ற விவரம் பின்வருமாறு...
பாஜக - உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, உத்தராகண்ட், இமாசல பிரதேசம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா
பாஜக கூட்டணி கட்சிகள் - பீகார், புதுச்சேரி, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம்