'விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகவும், திட்டமிட்டது மாதிரி ரோவரின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டதாகவும், ரோவரின் உந்துவிசை, லேண்டரின் தொகுதிகள் இயல்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ அறிவித்தது.
மேலும் நிலவின் தென்துருவத்தில் சல்பர், அலுமியம், கால்சியம் உள்ளிட்ட பல தனிமங்கள் இருப்பதை பிரக்யான் உறுதி செய்துள்ளதாகவும், ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.