விண்ணில் பாயும் ’ஆதித்யா-L1’ விண்கலம்.. நேரில் காண பொதுமக்களுக்கு அனுமதி..!
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (18:07 IST)
சந்திராயன் 3 வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா L1 என்ற விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது. இதை இணையதளம் மூலம் பொது மக்கள் பார்ப்பதற்கு இஸ்ரோ அனுமதி அளித்துள்ளது. இது குறித்த விவரம் பின்வருமாறு
இஸ்ரோவின் அதிகாரப்பூர்வத் தளமான https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்துக்கு முதலில் செல்ல வேண்டும்.
அதன்பின் ஆதார் அட்டை அல்லது அரசு அங்கீகரித்த ஏதேனும் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண் மூலம் இணையத்தில் Register பக்கத்தில் தேவையான தரவுகளை பதிவிட்டு அனுமதிச்சீட்டு பெற்றலாம்.
ஒரு அனுமதிச்சீட்டில் 2 பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம் என்றும், முன்பதிவு செய்வதற்கு இன்று நண்பகல் 12 மணிக்கு மேல் தொடங்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் ஆதித்யா L1 விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள லான்ச் வியூ கேலரியில் இருந்து நேரடியாக காணலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.