எல்லா தப்பையும் அவரு தான் பண்ணாரு: பொன்னாரை விமர்சித்த கேரள முதலமைச்சர்

சனி, 24 நவம்பர் 2018 (11:09 IST)
பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய போலீஸார் மீது எந்த தவறும் இல்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஐயப்பனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றார். அவருடன் சில கட்சி ஆட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீஸார் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை பம்பை அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சரை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸார் கூறினர்.
 
அதுமட்டுமில்லாமல் அவரை காரில் செல்ல அனுமதிக்காத போலீஸார் பேருந்தில் மட்டும்தான் செல்ல வேண்டும் என கூறியதால் அவர் தரிசனம் செய்ய சக பக்தர்களோடு பேருந்தில் சென்றார். கேரள போலீஸ் மத்திய அமைச்சரையே அவமத்துவிட்டனர் என கடும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கேரள முதலமைச்சர், பினராயி விஜயன், போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்தினார். அவரை அவமரியாதையாக நடத்தவில்லை. தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பொன்னார் கேட்டுக்கொண்டதால் தான் அவருடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் போலீஸார் மீது எந்த தவறும் இல்லை என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்