இன்று நடைதிறப்பு –சபரிமலை சாலைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போலிஸ்

வெள்ளி, 16 நவம்பர் 2018 (08:04 IST)
இன்று சபரிமலை நடைதிறக்கப்படுவதால் சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதன் பின் பெருவாரியாப ஆதரவும் பலத்த எதிர்ப்புகளும் ஒருங்கே வந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முற்போக்குவாதிகளும் தங்கள் ஆதரவைக் கொடுத்து வரும் நிலையில் இந்து மற்றும் வலதுசாரி அமைப்புகள் ஐய்யப்ப பக்தர்களோடு ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் சிறப்பு வழிபாட்டிற்காக 5 நாட்கள் சபரிமலை நடைதிறக்கப்பட்டது. அப்போது அங்கே ஐய்யப்ப தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியதால் போலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலவரம்  மூண்டது. இதனையடுத்து நடை திறந்திருந்த 5 நாளும் ஒரு பெண் பக்தர் கூட வழிபாடு செய்ய உள்ளே செல்ல முடியவில்லை. ஆர்ப்பார்ட்டட்த்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மேல் போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. இன்றிலிருந்து 41 நாட்களுக்கு நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து சென்ற முறை களவரம் நடந்த இடங்களைப் போலிஸ் தங்கள் கட்டுப்பட்டில் கொண்டு வந்துள்ளது. பெண்களைக் கோயிலின் உள்ளே அனுமதிப்பதில் ஆளும் கட்சி உறுதியாக இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலிஸார் சோதனை செய்து பின்னரே அனுமதிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்