பெண் காவல் கண்காணிப்பாளரை "நாயுடன்" ஒப்பிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ: வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

Siva

வியாழன், 4 செப்டம்பர் 2025 (08:18 IST)
கர்நாடக மாநிலம், தாவணகெரேவில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் பெண் காவல் கண்காணிப்பாளரை "செல்ல நாயுடன்" ஒப்பிட்டுப் பேசியதால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஹரிஹர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான பி.பி.ஹரீஷ், தாவணகெரே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரஷாந்த் தன்னை உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில், காங்கிரஸின் செல்வாக்குமிக்க ஷாமனூர் குடும்பத்தினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 
"நான் ஒரு கூட்டத்திற்கு சென்றால், அவர் என்னை பொருட்படுத்துவதில்லை. ஆனால், ல்லிகார்ஜுனா குடும்பத்தினருக்காக ஒரு மணி நேரம் காத்துக்கிடப்பார். அப்போது, அவர் அவர்களின் வீட்டில் உள்ள ஒரு 'போமரேனியன் நாய்' போல நடந்துகொள்வார்" என்று கூறியதாக தெரிகிறது.
 
இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பிறகு, காவல் கண்காணிப்பாளர் உமா பிரஷாந்த், எம்.எல்.ஏ. பி.பி.ஹரீஷ் மீது புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்