காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்களை வரவேற்றாலும், அவற்றை செயல்படுத்த 8 ஆண்டுகள் எடுத்தது மிகவும் தாமதமானது என்று விமர்சித்துள்ளார். மத்திய அரசின் இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மந்தமான பொருளாதார வளர்ச்சியா, வீட்டுக்கடன் அதிகரிப்பா, வீட்டு சேமிப்பு குறைவா, அல்லது வரவிருக்கும் தேர்தல்களா என பல காரணங்களை அடுக்கி கேள்விகளை எழுப்பினார். மேலும், "டிரம்பின் வரிவிதிப்பா அல்லது இவை அனைத்துமா?" என்றும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.