சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் நாளையுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இந்நிலையில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார் என தகவல்கள் வெளியாகிறது.