கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு ஜக்கி வாசுதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் இதனை அடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின் ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட வீடியோவில் தான் நலமாக இருப்பதாகவும் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.