நாட்டையே 3 ஆக பிரிக்க மோடி ஜி திட்டம்!!

சனி, 11 ஏப்ரல் 2020 (16:56 IST)
கொரோனா அபாயம் காரணமாக நாட்டையே மூன்று மண்டலமாக பிரிக்கும் திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாட்டில் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வரும் 14 ஆம் தேதிவரை இருந்த ஊரடங்கு உத்தரவை வரும் 30 ஆம் தேதிவரை நீட்டிக்குமாறு பல மாநில முதல்வர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
 
இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மோடி மக்களிடையே உரையாறுவார் என தெரிகிறது. அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதைத்தவிர்த்து நாட்டை 3 மண்டலாமாக பிரிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளதாம். அதாவது, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட் இடம் சிவப்பு மண்டலம். இந்த மண்டலத்தில் ஊரடங்கு தொடரும். 
 
அடுத்தப்படியாக குரைந்த பாதிப்பு உள்ள பகுதி மஞ்சள் மண்டலம், இங்கு கண்காணிப்புடன் மக்கள் நடமாட்டம், பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிவகை செய்யப்படும். அடுத்து பாதிப்பு இல்லாத இடம் பச்சை மண்டலம். இங்கு இந்த வித கட்டுபாடுகளும் இன்றி வழக்கம் போல அனைத்தும் நடக்கும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்