இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள்! – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (14:34 IST)
மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களின் முன்முயற்சி குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிரதமரான காலம் முதல் தொடர்ந்து மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசி வரும் பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மேற்கொள்ளும் முன்முயற்சிகள், அவர்களது பண்பாடு மற்றும் சுயதொழில் முன்னேற்றம் போன்றவை குறித்து பேசி வருகிறார்.

அந்த வகையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “தூத்துக்குடி மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை நட்டு வளர்க்கின்றனர். நாம் இயற்கையை பாதுகாக்கும்போது இயற்கையும் நம்மை பாதுகாக்கும்” என பாராட்டி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்