என்ன விலை கொடுத்தாவது விவசாய நலன்களை காப்போம்! – பிரதமர் மோடி உறுதி!

ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (08:21 IST)
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் எப்பாடுப்பட்டாவது விவசாயிகள் நலன்களை காப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்களுக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் திரண்டு கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதும் போதிய உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக, தொழில்சபை கூட்டமைப்பில் பேசிய பிரதமர் மோடி ”இந்தியாவில் விவசாயம் செய்யும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு வேளாண் சட்டங்கள் உதவியாக இருக்கும், மத்திய அரசு தனது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலமாக என்ன விலை கொடுத்தாவது விவசாயிகள் நலன்களை பாதுகாக்கும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்