டெல்லி குடிசைப் பகுதியில் நள்ளிரவில் பெரும் தீவிபத்து

வெள்ளி, 22 மே 2020 (08:28 IST)
டெல்லி கீர்த்தி நகரில் உள்ள சுனா பாட்டி குடிசைப் பகுதியில் வியாழக்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன. தீவிபத்து காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

"சுனா பாட்டி குடிசைப் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதாக இரவு 11.20 மணியளவில் தகவல் கிடைத்தது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 45 வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இப்போதுவரை உயிரிழப்புகள் இல்லை. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது," என டெல்லி தலைமை தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் பன்வார் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளிகளை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் உயரத்தைவிட அதிகமான உயரத்தில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதை அந்தக் காணொளிகளில் காண முடிகிறது. எனினும், அவற்றின் உண்மைத் தன்மையை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.

சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தீ பற்றி எரிவதைப் பார்க்க முடிந்தது என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் ஒலியை தூரத்தில் இருந்தே கேட்க முடிந்தது என்றும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

Delhi: A fire broke out at the Chuna Bhatti slum area in Kirti Nagar. 29 fire tenders on the spot. Fire-fighting operations underway. More details awaited. pic.twitter.com/nDfT1lxHTF

— ANI (@ANI) May 21, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்