இந்தியாவில் தீவிரவாதம் செய்ய வரும் பயங்கரவாதிகள் பெரும்பாலும் போலி பாஸ்போர்ட்டில் தான் அண்டை நாட்டில் இருந்து வருகின்றனர் என்பதும், இதனால் போலி பாஸ்போர்ட்டை முற்றிலும் தடுக்க மத்தியில் உள்ள மோடி அரசு ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாதம் முதல் சிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட்டுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ்போர்ட் என்பது முற்றிலும் போலியை தடுக்கவும், பயண பாதுகாப்பு மேம்படுத்தவும், குடியுரிமை செயல்முறைகளை நவீனமாக்கவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-பாஸ்போர்ட்டை போலியாக உருவாக்க முடியாது என்றும், அதேபோல் அந்த சிப்பில் மாறுபாடு செய்வதும் மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவுக்குள் ஒரே ஒரு நபர் கூட போலி பாஸ்போர்ட் மூலம் நுழைய முடியாது என்றும், அதன் காரணமாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.