நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் எப்போது? அமைச்சர் ராஜ்நாத் சிங்
புதன், 9 ஆகஸ்ட் 2023 (20:10 IST)
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி எம்பிகள் கடந்த இரண்டு நாட்களாக விவாதம் செய்த நிலையில் அதற்கு பதில் அளித்து இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்,
இந்த நிலையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலடி கொடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.