17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி: அமித்ஷா

புதன், 9 ஆகஸ்ட் 2023 (20:05 IST)
ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தினமும் 17 மணி நேரம் பிரதமர் மோடி உழைக்கிறார் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார்.  
 
மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அமித்ஷா மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால் இதுவரை 152 பேர் உயிரிழந்தனர் என்றும் மே மாதத்தில் மட்டும் 107 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சி இடையாத முயற்சிகளை மேற்கொண்டோம் என்றும் கலவரம் ஏற்பட்டதும் துணை ராணுவ படை குவிக்கப்பட்டது என்றும் மணிப்பூர் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
காங்கிரஸ் காலத்தில் அதிக வன்முறைகள் நடந்துள்ளன என்றும் வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது இல்லை என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். 
 
மேலும் பிரதமர் மோடி 17 மணி நேரம் உழைக்கிறார் என்றும் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைப்பதால் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியை பிரதமராக வருவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்