ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Siva
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (09:35 IST)
தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
நேற்று ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அவர் மீது மலர்களை வீசுவது போல் மலர்களுடன் கற்களை வைத்து வீசியதால் ஜெகன்மோகன் ரெட்டி நெற்றியில் காயம் ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து கற்களை வீசிய மர்ம நபர்களை  பிடிப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி அவர் விரைந்து குணமடைந்து பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான கல் வீச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன் என்றும் அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது என்றும் ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரிகத்தையும் பரஸ்பரம் மரியாதையையும் நிலை நாட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்