மும்பை ரயில் நிலையங்களில் பல கடைகள் இருந்தாலும், புது முயற்சியாக விரைவில் பீட்சா ஏடிஎம் ஒன்று அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனி ரயில் பயணிகள், 5 நிமிடங்களில் பிரெஷான பீட்சா பெரும் வகையில் பீட்சா தயாரிக்கும் இயந்திரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே நிர்வாகமான 'ஐஆர்சிடிசி' எந்த நேரத்திலும் பீட்சா பெறுவதற்காக பீட்சா ஏடிஎம் இயந்திரத்தை முக்கியமான 5 ரயில் நிலையங்களில் அமைத்து சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கல்யாண், எல்டிடி, மும்பை சென்ட்ரல், சிஎஸ்டி மற்றும் அந்தேரி ஆகிய ரயில் நிலையங்கள் தற்போது முடிவாகியுள்ளன. மேலும், விருப்பமுள்ள பிளேவரை பயணிகள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
பீட்சா ஏடிஎம் இயந்திரம் நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதன் பாகங்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு, சீனாவில் பொருத்தப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளது.