இந்த புகைப்படத்தில் உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?

திங்கள், 21 நவம்பர் 2016 (12:31 IST)
சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் இந்த புகைப்படம் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
இப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை உற்றுப் பாருங்கள்.. ஏதேனும் புரிகிறதா?..
 
அதாவாது, அருகருகில் இருக்கும் ஒரு ஏ.டி.எம் மையம் மற்றும் மதுக்கடைக்கு மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். 
 
ஏ.டி.எம் வரிசையில் வேஷ்டியை இறக்கியும், மதுக்கடை வரிசையில் வேஷ்டியை தூக்கியும் கட்டியுள்ளனர்.
 
இப்புகைப்படத்தை கோழிக்கோடு கலெக்டர் பிரசாந்த் நாயர் தந்து பேஸ்புக் பக்கத்தில் பகிர, இப்புகைப்படம் மேலும் வைரலானது.

வெப்துனியாவைப் படிக்கவும்