இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுபாடு ஏற்பட்டது. இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் காத்திருப்பு நேரமும் அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து இருப்பதால் உள்ளூர் மட்டத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் உறுதி செய்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.