இது தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில் குஜராத் அரசு விரும்பினால் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை வழங்கலாம் என அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குஜராத் அரசு அவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளது.
குஜராத் அரசின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள், பொதுமக்கள் இடையே கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த விடுதலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பில்கிஸ் பானு “எனது வாழ்க்கையை சீரழித்த 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர்களது விடுதலை என் அமைதியை பறித்ததோடு மட்டுமல்லாமல் நீதி மீது நான் வைத்திருந்த நம்பிக்கையும் தகர்த்துவிட்டது. தயவுசெய்து விடுதலை உத்தரவை திரும்ப பெற்று நான் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ உதவுங்கள்” என கூறியுள்ளார்.