இதனையடுத்து, உடல்நிலை மேலும் மோசமடைந்த சுக்ரா உயிரிழந்துவிட்டார். பின்னர் மாலையில் மருத்துவர் அங்கு வந்துள்ளார். சுக்ராவின் மரணத்தை தாங்க முடியாத தொழிலாளர்கள் அவரை சரமாறியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த மருத்துவர் தேன் தத்தா (73)ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆயினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.