அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்:

செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (22:46 IST)
நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்ட குழுவினர்களுடன் இன்று மதியம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து மீண்டும் இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
 
அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 4 நாட்களாக நீடித்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறபட்டது. அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட நிலையில் அந்த அதிகாரி அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிபார் என்பதால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது
 
இதனையடுத்து நாளை முதல் அரசு மருத்துவர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்லவிருப்பதை அடுத்து அவர் வெளிநாட்டுக்கு கிளம்பும் முன் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு தரப்பு தீவிரமாக செயல்பட்டதாகவும், அதற்கு பலன் கிடைத்ததாகவும் அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்