அமெரிக்காவின் பொருளாதார டேட்டாக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியதால், டாலர் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதேசமயம், இந்திய ரூபாய் உள்பட ஆசிய நாணயங்கள் வலுவாக செயல்பட்டதாலும் இந்திய ரூபாய்க்கு ஆதரவு கிடைத்தது. இருப்பினும், கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக ரூபாயின் லாபம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் ரூ.86.71 என்ற மதிப்பில் இன்று வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது ரூ.86.54 வரை உயர்ந்தாலும், குறைந்தபட்சமாக ரூ.86.78 ஐ தொட்டது. இறுதியில், 26 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக நிலைபெற்றது.