நம் நாடு துணைக்கண்டமாக பரந்துவிரிந்தது. பன்முகங்களைக்கொண்டது. பல மாநில மக்கள் பல மொழிகள் பேசினாலும் இந்தியர் என்ற ஒன்றுமைக்கு உலகில் அடையாளமாக உள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மட்டும்தான் தேசிய குடியுரிமைப் பதிவேடு உள்ளது. தற்போது இந்தப் பதிவேட்டில் 19 லட்சம் மக்களின் பெயர்கள் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மக்கள் தம் அதிருப்தியை தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த தேசியக் குடியுரிமைப் பதிவு உள்ளது என்றால் , அண்டை நாடான வங்க தேசத்திலிருந்து எல்லை வழியே ஊடுருவி அசாமில் சட்டத்திற்கு விரோதமாக தங்கியுள்ளனர். இவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதன்பொருட்டு அசாம் மக்கள் யார் ? வங்க தேசத்தவர் யார் ? என்பதை அடையாளம் காண முடியாமல் அங்குள்ள அதிகாரிகள் திணறிவருகின்றனர்.