பழத்தைத் திருடியதற்காக சிறுவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையா இது? அதிர்ச்சி வீடியோ!

திங்கள், 27 ஜூலை 2020 (07:53 IST)
உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்வு ஒன்றில் கொடுப்பதற்காக வைத்திருந்த பழங்களை சிறுவர்கள் திருடியதை கண்டுபிடித்தவர்கள் அவர்களுக்கு கொடூரமான தண்டனையை வழங்கியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் இந்து மத நிகழ்ச்சி ஒன்று நடக்க இருந்த நிலையில் அதில் கலந்து கொள்பவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதற்கு பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதனை இரண்டு சிறுவர்கள் திருடியதாக சொல்லப்படுகிறது. அதைக் கண்டுபிடித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த இரு சிறுவர்களையும் கயிற்றால் கை கால்களை கட்டிப் போட்டு அவர்களைத் தாக்கி வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் சிறுவர்கள் அழுதுகொண்டே கட்டை அவிழ்க்க முயற்சி செய்யும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய செய்கின்றனர். மேலும் பழத்தை திருடியதற்காக இவ்வளவு கொடூரமான தண்டனையா எனவும் கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.

இதையடுத்து அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலிஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்த நிலையில் போராட்டம் நடத்தி எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்