100-க்கு போன் போட்டு கலாய்க்கும் மக்கள்: புலம்பி தள்ளும் போலீஸ்!!

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (11:32 IST)
கொல்கத்தாவில் உள்ள பிதான்நகர் காவல் நிலைய அதிகாரிகள் பலரிடம் இருந்து கலாப்பதற்கு 100-க்கு அவசர அழைப்புகள் வருவதாக கூறியுள்ளனர். 


 
 
சமீபத்தில் அவசர அழைப்பு எண் 100-க்கு தொடர்புக் கொண்ட இளம்பெண் கைவிட்ட காதலனை கைது செய்ய வேண்டும் என்றும், சில நேரங்களில் குழந்தைகள் டயல் செய்து சிரிப்பதும், குழந்தைகள் படிக்காவிட்டால் வந்து பிடித்துக் கொண்டு போவதாக பெற்றோர்கள் கூறுவதும், போன் லைன் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய சில வாடிக்கையாளர்கள் வேடிக்கையாக 100-ஐ அழைப்பதும் வழக்கமாக இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பிதான்நகர் நகர காவல் கட்டுப்பாட்டறையில் உள்ள 3 அவசர அழைப்பு எண் 100-க்கு தினசரி 1,000-க்கும் மேற்பட்ட குறும்பான அழைப்புகள் வருவதாக காவல் அதிகாரிகள் புலம்புகின்றனர்.
 
இந்நிலையில், இவ்வாறு செய்பவர்கள் மீது வாழக்குப்பதிவு செய்யப்படும் என்றும், குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு ரூ.1000 அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனறு பிதான்நகர் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்