நரகமாகும் டெல்லி; தினமும் 50 சிகரெட் புகைக்கும் டெல்லி மக்கள்

சனி, 11 நவம்பர் 2017 (16:02 IST)
டெல்லியில் உள்ள காற்று மாசுபாட்டுக்கு அங்கு வசிப்பது தினமும் 50 சிகரெட் பிடிப்பதற்குச் சமம் என்று பெர்க்லே எர்த் அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியிடங்களுக்குச் செல்லும்போது சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் உள்ளிடவையால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு சாலையில் சூழ்ந்த புகை மூட்டத்தால் வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காற்று மாசுபாட்டால் மக்கள் வசிப்பது தினமும் 50 சிகரெட் பிடிப்பதற்குச் சமம் என அமெரிக்காவின் பெர்க்லே எர்த் அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்