1K ஜிபி டேட்டா ரோல் ஓவர்; ஏர்டெல்லின் புதிய திட்டம்: விவரங்கள் உள்ளே...

புதன், 8 நவம்பர் 2017 (15:09 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது ஹோம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு, பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திற்கு எடுத்து செல்லும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
ஏற்கனவே போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்கியுள்ளது. தற்போது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் இதேபோன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. 
 
ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தை இந்தியா முழுக்க 21 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டேட்டா ரோல் ஓவர் (Data Rollover) என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டா அடுத்த மாதத்திற்கான கட்டண முறையில் சேர்க்கப்பட்டு விடும். 
 
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1000 ஜிபி வரை டேட்டாவை சேமிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்