ஆதாரை வைத்து வெளிநாடு செல்லலாம் – மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (09:02 IST)
இந்திய அரசின் அடையாள அட்டைகளுள் ஒன்றான ஆதார் அட்டையை வைத்து அண்மை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு விசா இன்றி செல்லலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசு இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் வயது வித்தியாசமின்றி ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. இந்த ஆதார் அட்டைகளை வங்கிக் கணக்குகள், சிம் கார்டு வாங்கும் போது கொடுத்தல் உள்ளிட்ட பல செயல்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள சொல்லியும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த ஆதார் அட்டைகளால் தனி மனிதனின் அந்தரங்க விவரங்கள் திருடப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியர்கள் , நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பயணிக்க முடியும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படவில்லை.  அவர்கள் பான் கார்டு, ஒட்டுநர் உரிமம், மத்திய அரசு சுகாதார சேவை அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை அடையாளமாக பயன்படுத்த வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது  65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 15 வயதுக்குட்பட்டவர்களும் ஆதாரைப் பயன்படுத்தி இவ்விரு நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்