இப்படியே போனா எப்படி..? அப்செட்டில் ஏர்டெல், வோடபோன்

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (14:17 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் டிசம்பர் மாத வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. வழக்கம் போல் ஜியோவின் வாடிக்கையாளர்கள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். 
 
இந்நிலையில் இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு, 
 
அதாவது, ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 85.6 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்திருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடியாக அதிகரித்து இருக்கிறது. 
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த காலக்கட்டத்தில் சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 41.87 கோடியாக உள்ளது. 
 
ஏர்டெல் நிறுவனம் சுமார் 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 34.03 கோடி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. மேலும், மொத்தமாக அனைத்து நெட்வொர்க் நிறுவனக்களையும் சேர்த்து 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் நம்பர் போர்டபிலிட்டியை பயன்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்