ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறப்பதா? பெற்றோர்கள் எதிர்ப்பால் அதிர்ச்சியில் மத்திய அரசு
செவ்வாய், 9 ஜூன் 2020 (07:14 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிகமாகிக் கொண்டே போகிறது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நேற்று வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி கல்லூரிகளைத் திறக்கலாம் என அறிவித்திருக்கிறது
மத்திய அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மத்திய அரசு பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிரில் விளையாடுகிறது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்
தினமும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பள்ளிகளை திறந்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்தியாவில் மொத்தம் 33 கோடி மாணவர்கள் இருப்பதாகவும் இந்தியாவைப் பொருத்தவரை மாணவர்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், கொரனோ பாதிப்பு இந்தியாவில் ஜீரோவாக இருக்கும் வரை பள்ளிகளை திறக்க கூடாது என்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
இன்றைய இதையும் மீறி பள்ளிகளை திறந்தால், பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளதால் மத்திய அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது