கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது புயலாக உரு மாறியது. அம்பன் என பெயரிடப்பட்ட அந்த புயல் சூப்பர் புயலாக மாறும் என்றும், மேற்கு வங்கம் மற்றும் வங்காள விரிகுடா இடையே கரையை கடக்கும் என்றும் இந்தியா வானிலை ஆய்வு மையம் கணித்தது, அதன் பேரில் மேற்கு வங்கத்தில் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படியே குறிப்பிட்ட நேரத்தில் அம்பன் மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது.