இந்திய எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் ? –தொற்றிக்கொண்ட பதற்றம்

வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:42 IST)
இன்று மதியம் மீண்டும் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள இந்திய விமானியை மீட்க இந்திய அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதையடுத்து பாகிஸ்தான் அரசும் அபிநந்தனை விடுவிக்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் சற்றுமுன்னர் மீண்டும் ஜம்மு காஷ்மீரின்  ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.. பிற்பகல் 2.15 மணி வாக்கில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்போது மீண்டும் எல்லைப் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்