பாகிஸ்தான் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு: கர்தார்பூர் குருத்வாரா நுழைவிட திறப்புவிழா

திங்கள், 30 செப்டம்பர் 2019 (18:52 IST)
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் உள்ள குருத்வாராவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சென்று வழிபட, இருநாடுகளின் எல்லையில் அமைக்கப்படும் புதிய சாலை மற்றும் நுழைவிட திறப்புவிழா நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.


 
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இது குறித்து கூறுகையில், கர்தார்பூர் நுழைவிட திறப்புவிழாவுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் சீக்கிய மதத்தின் பிரதிநிதியாக உள்ளார். அவருக்கும் நாங்கள் முறையாக அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, சீக்கியர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவில் உள்ள பஞ்சாபில் வசித்தனர்.
 
கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார்.
 
1947க்கு பிறகு மூன்று போர்களில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உறவில் உண்டாகியுள்ள ஒரு முன்னேற்றமாகவே இது பார்க்கப்படுகிறது.


 
தங்கள் எல்லைக்குள் அமையவிருக்கும் சாலைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ளவதாக இரு நாடுகளும் கூறியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்