நடுவானில் தீ பிடித்த விமானம்.. மாட்டிக்கொண்ட அமைச்சர்.. விமானியின் பலே சாதுர்யம்..

Arun Prasath

திங்கள், 30 செப்டம்பர் 2019 (14:11 IST)
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டு 100 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பற்றியுள்ளார்.

கோவாவிலிருந்து நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில்  கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் உட்பட 180 பேர் பயணித்தனர். இந்நிலையில் விமானம் கோவாவிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென விமானத்தின் ஒரு என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட பயணிகள் அலறியடித்து கதறினர்.

இதனை கவனித்த விமானி, உடனடியாக தீ பிடித்த என்ஜினை அணைத்து, மீதமுள்ள என்ஜின்களை இயக்கி கோவா விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பினார். விமானம் அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டனர்.

இது குறித்து கோவா மாநில சுற்றுசூழல் அமைச்சர் நிலேஷ், ”விமானத்தின் என்ஜினில் தீ பிடித்ததை அடுத்து, பயணிகள் பயத்தில் அலறினர். பின்பு விமானி தீப்பிடித்த என்ஜினை அணைத்து மீதமுள்ள  என்ஜின்களை இயக்கவிட்டு பயணிகளை காப்பாற்றினார்” என கூறினார். பயணிகளை காப்பாற்றிய விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். எனினும் இந்த சம்பவம் விமான பயணிகளிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்