டென்னிஸ் அகாடமி நடத்திய தேசிய வீராங்கனை ராதிகா யாதவ்வை அவரது தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பலமுறை கோப்பைகளையும், விருதுகளையும் வென்றுள்ளார். சொந்தமாக டென்னிஸ் அகாடமி தொடங்க வேண்டும் என நீண்ட காலமாக ஆசைப்பட்ட ராதிகா சமீபத்தில்தான் டென்னிஸ் அகாடமி ஒன்றை தொடங்கினார்.
ராதிகாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் டென்னிஸ் அகாடமி குறித்தும் அவர் உடன்படவில்லை என்றும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராதிகாவின் தந்தை துப்பாக்கியால் தனது மகளை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராதிகா யாதவ் பரிதாபமாக பலியானார். போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ராதிகாவின் தந்தையை கைது செய்துள்ளனர்.
Edit by Prasanth.K