2007ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து 350 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதேசமயம் ஏர்செல் – மேக்ஸி நிறுவனங்களுக்கு இடையேயான 3000 கோடி ரூபாய் ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் பங்கிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளவிருந்த நிலையில், கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார் ப.சிதம்பரம்.
ஆனால் அவர் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறையினரும் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். இதனால் ப.சிதம்பரம் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.