இங்கிலாந்து பொதுத்தேர்தல் முடிவு: பிரதமர் தெரஸா மே அதிர்ச்சி

வெள்ளி, 9 ஜூன் 2017 (06:32 IST)
பிரெக்ஸிட் நடவடிக்கை, தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் ஆகியவற்றால் கடந்த சில மாதங்களாக பரபரப்புடன் இருந்த இங்கிலாந்து நாட்டில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது.



 


2020ஆம் ஆண்டு வரை ஆட்சியின் காலம் இருந்தலும் பிரதமர் தெரசா மே அறிவிப்பின்படி அங்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிப்பின்போது இது தெரஸாவின் தவறான முடிவு என்று அவரது கட்சியிலேயே பலர் விமர்சித்தனர். தற்போது அது உண்மையாகியுள்ளது.

ஆம், இங்கிலாந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி பிரதமர் தெரஸா மே அவர்களின் கன்சர்வேடிவ் கட்சி 314 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் வேண்டும். இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி கன்சர்வேடிவ் கட்சி 15 தொகுதிகளிலும், தொழிற்கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முடிவு பிரதமர் தெரஸா மே அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தெரஸா மே அவர்களின் கன்சர்வேடிங் கட்சி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது தொங்கு பாராளுமன்றம் அமையுமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்