அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் பன்னீர்செல்வம் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் எனவும், இல்லையெனில் இடைக்கால நிவாரணமாக அதிமுக (OPS) என்ற பெயரில் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போதிய காலம் இன்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இயலாமல் போனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில். அ.தி.மு.க.வையும், தனது அணியையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிச்சாமி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.