பாரதிய ஜனதா கட்சி தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டுவோம் என ஹிமாச்சலப் பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் சத்தி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது
இந்த நிலையில் தடைக்காலம் நீங்கிய பின்னர் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மண்டி என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சத்பால் சிங் சத்தி, 'மேடையில் உள்ள பாஜக தலைவர்களையோ, பிரதமர் மோடியையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கையை வெட்டி வீசுவோம்' என மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார்.