நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம்: பாஜக எம்.பி. தருண் விஜய்

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (14:56 IST)
அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், தென்னிந்தியர்களை குறிப்பிட்டு நாங்கள் கருப்பின மக்களோடு வாழ்கிறோம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.


 

 
அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக எம்.பி. தருண் விஜய், நாங்கள் இனவெறியர்களாக இருந்து இருந்தால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா என தென் இந்தியர்களுடன் நாங்கள் எப்படி வாழ்வோம்? 
 
எங்களை சுற்றிலும் கருப்பு நிற மக்களை கொண்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்துக்கு எதிராக பலரும் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 
 
பொன் ராதாகிருஷ்ணன் முகத்தில் தார் பூச சொன்னார். தருண் விஜய் ஒட்டு மொத்த தமிழர்களின் முகத்திலும் கரி பூசிவிட்டார் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். உங்கள் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்ற புகைப்படத்துடன் தமிழக பாஜக தலைவர்களை ஒப்பிட்டு கேலி செய்துள்ளனர்.
 
இவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, றுப்பு நிற தென் இந்திய மக்களோடு வாழ்வது ஏதோ அவர்கள் பெருந்தன்மை போல நிறவெறியோடு பிஜேபியின் தருண் விஜய் பேசுவது அவமானகரமானது என பதிவிட்டுள்ளார். 


 
அடுத்த கட்டுரையில்