தென்மாநிலங்கள் தனி நாடாக பிரிய வேண்டிய நிலை ஏற்படும்: காங்கிரஸ் எம்பி எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (06:13 IST)
தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்கள் கருப்பாக இருப்பவர்கள், அவர்களுடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்த பாஜக எம்பி தருண்விஜய்க்கு கண்டனங்கள் எழுந்ததும் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தது அறிந்ததே


 


இந்த நிலையில் இதுகுறித்து நேற்று பாராளுமன்றத்தில் பேசிய கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே, தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தியர்களா இல்லையா என அரசு விளக்கமளிக்க வேண்டும் என  ஆவேசமாக வாதிட்டார். தருண்விஜய் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இது போன்ற பேச்சுக்களை தொடர்ந்து அனுமதித்தால் தென் மாநிலங்கள் தனி நாடாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். கார்கேவின் பேச்சுக்கு எதிர்கட்சிகளி‌ன் மற்ற எம்பிக்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் பாகுபாடு தொடர அனுமதிக்கப்போவதில்லை என உறுதியளித்தார்.
அடுத்த கட்டுரையில்