வெங்காயம் தராத கடைக்காரர்... ஹோட்டலை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் !

வியாழன், 26 டிசம்பர் 2019 (20:39 IST)
கேரள மாநிலத்தில் உள்ள ஹோம்லி மீல்ஸ் என்ற உணவகத்தில் நேற்று இரவு மதுபானம் பருகியிருந்த  மூன்று இளைஞர்கள் சாப்பிட வந்தனர். அப்போது அங்கிருந்த ஊழியரிடம் அசைவ உணவு பரிமாறுமாறு கேட்டுள்ளனர்.
ஊழியரும் அவர்களுக்கு உணவு பரிமாறி உள்ளார். அதன்பின், கூடுதலாக   அவர்களுக்கு  கூடுதலாக வெங்காயம் கேட்டுள்ளனர். அதற்கு ஹோட்டல் ஊழியர் தரமறுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
அதன்பின், அங்கிருந்து வெளியேறிய இளைஞர்கள் தங்களது நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்து அந்த ஹோட்டலை அடித்து நொறுக்கினர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான டிஒய்எஃப் மீது ஹோட்டல் நிர்வாகத்தின் புகார் தெரிவித்துள்ளது.
 
தற்போது, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்