கடனாளி விவசாயியை கோடீஸ்வரனாக்கிய வெங்காயம்!

ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (13:13 IST)
பொதுவாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய கடன் வாங்கி விவசாயம் செய்து விட்டு மழை பொய்த்ததாலோ அல்லது அதிகமாக மழை பெய்ததாலோ நஷ்டமாகி கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்த பல செய்திகளை நாம் கேள்விப்பட்டு இருப்போம்
 
இந்த நிலையில் தற்போது ஒரு விவசாயி வெங்காய அறுவடை செய்து ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாகி உள்ள செய்தி வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயி வங்கியில் கடன் வாங்கி தனது 10 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிர் செய்துள்ளார். அவர் வெங்காய அறுவடை செய்த நேரத்தில் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததால் அவருக்கு ஏராளமான லாபம் கிடைத்துள்ளது
 
இதனையடுத்து வங்கி கடனை அவர் முழுவதுமாக அடைத்தது மட்டுமின்றி தனது நிலத்தின் பக்கத்தில் உள்ள 10 ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து மொத்தமுள்ள 20 ஏக்கரில் மீண்டும் வெங்காயம் பயிர் செய்தார். அவர் இரண்டாவது முறையாக வெங்காய அறுவடை செய்தபோது கிலோ ரூ.200க்கு மேல் விலை அவருக்கு கிடைத்தது
 
இதனை அடுத்து அவர் ஒரே மாதத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. வெங்காய விலை ஏற்றத்தால் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் போது இவர் போன்ற விவசாயிகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளது ஒரு வகையில் ஆறுதலான செய்தியாகவே பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்