பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் நடந்த பார்ட்டியில் போதை மாத்திரைகள், கொகைன் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த பார்ட்டியில் 30 இளம் பெண்கள் உட்பட 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பார்ட்டி விடிய விடிய நடந்ததாகவும் டான்ஸ், பாடல்கள் ஆட்டம் பாட்டம் ஆகியவை நடந்த இந்த பார்ட்டிக்காக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த வார்த்தையில் போதை மருந்து மற்றும் கொகைன் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.