இதனைத் தொடர்ந்து 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்தது. அந்த அறிக்கையில் “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என்றும் அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான மசோதா வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.