1.25 லட்சம் படுக்கைகள் தயார்: ஒமிக்ரானை சமாளிக்க தமிழக அரசு ஏற்பாடு!
புதன், 22 டிசம்பர் 2021 (07:38 IST)
தமிழகத்தில் ஒமிகிரான் வைரஸை சமாளிக்க 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிகிரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஒமிகிரான் வைரசால் மொத்தம் 200 பேருக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில்ஒமிகிரான் தொற்று பரவலை சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் 1.2 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் மிக மிக வேகமாக ஒமிகிரான் பரவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அரசும் இதனை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்