விருப்பத்தோடு உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது: நீதிமன்றம் கருத்து!

ஞாயிறு, 9 ஜூலை 2023 (08:48 IST)
விருப்பத்தோடு உடலுறவு ஈடுபட்டால் அது பாலியல் வன்முறை கிடையாது என ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது 
 
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த பின்னர் இருவரும் விருப்பத்தோடு உடலுறவில் ஈடுபட்ட பிறகு சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் போனால் அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
உடலுறவுக்கு பின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போவதற்கும் திருமணம் செய்து கொள்ளாமல் பொய்யான வாக்குறுதி அளிப்பதற்கும் இடையே நுட்பமான வித்தியாசம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒரு பெண்ணை ஒரு ஆண் வலுக்கட்டாயமாக உடலுறவு செய்தால் மட்டுமே அது பாலியல் வன்கொடுமை என்றும் விருப்பத்தோடு உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையில் வராது என்றும் ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்